"பிரவாஹியின் வலைபதிவுக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி"

"பிரவாஹியின் வலைபதிவுக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி" .

Friday, December 10, 2010

கணக்கு.... பிணக்கு... தொடர் பதிவு (1)




நாம் வாழும் வாழ்க்கை ஒரு கணக்குதான். பிறந்தது முதல் இறப்பது வரை எல்லாமே ஒரு கால்குலேஷன்  தான்... அந்த வகையில்.. சூடான செய்திகளை ஒரு கணக்குபன்னி இருக்கேன்

பத்து தலை நாகம்  :


இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில்   அமைந்துள்ள  தொல்புரம் பிரதேசத்தில்,பொக்கனை என்ற பகுதியில் பத்து தலை கொண்ட நாகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..




 இந்த சம்பவத்தை அடுத்து.. அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்து பரவல்கள் நிலவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


உலக அழிவின் அறிகுறியாயும், பகவான் கிருஷ்ணரின் அவதாரமாயும் , மேலும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பகவான் புத்தரின் அவதாரமாயும் தம்மை உருவகபடுத்தி கொண்டது இந்த நாகம் ...






பி கு: ரீல் இல்லாமல் பாம்பு எடுத்த படத்தை காட்டி ரீல் சுத்துராங்களோ



+ 2 தோல்வி :




இந்திய வான் தளத்தினர்  சோதனை செய்த அக்னி 2+  ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது.

ஒரிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் இன்று அக்னி 2+ ஏவுகணை நடத்தப்பட்டது.
அக்னி2 ஏவுகணை மேம்படுத்தப்பட்டு அக்னி 2+ முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.




ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்தது.

சரியாக அது இலக்கைத் தாக்கவில்லை என்று தெரிகிறது.

சோதனை தோல்வியில் முடிவடைந்ததற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


அக்னி 2+ ஏவுகணை 2500 முதல் 3000 கி.மீ., தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பி கு : +2 பரீட்சையில்  பெறுபேறு தோல்வி.....


5 மணிக்கு வந்த சிக்கல் 


ஸ்டில் கேமிராவில் எடுக்கப்பட்டதிரைப்படமான ‘சனிக்கிழமை சாயங்கலாம் 5 மணி’ படம் இந்தியாவின் "லிம்காவின் உலக சாதனை" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


இந்த படத்தில்புதுமுக நடிகர்கள் சரத், மாலினி, டைரக்டர் ரவிபாரதி, ரதிபாலா, மீராகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


படத்தில் குடியும் கூத்துமாக பி.ஆர்.ஓ. சக்திவேல் ஆட்டம் ஒன்றைப் போட்டிருக்கிறார். அறிமுகமே அலம்பலும், அலப்பறையுமாக இருப்பதாக சொல்கிறார்கள். வட்டாரத்தினர்.


‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படத்திற்கு எஸ்.பி.எல்.குகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்... இயக்கம் ரவிபாரதி.


சாதனை புத்தகத்தில் இடம் பெற்றாலும் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது இப்படம்.

இடையூறு, சிக்கல்களைத் தாண்டி இப்  படத்தை வெளியீடு செய்ய தயாரிப்புத் தரப்பு கடுமையாக முயற்சி எடுத்து வருகிறது
 .

நல்ல படங்களுக்கு இப்போ எல்லாம் எங்கே மதிப்பு இருக்கு என்று புலம்புகின்றனர் படக் குழுவினர்.
 
 பி கு : பாம்பு படமெடுத்தால் ரசிக்கும் ரசிகர்கள் இந்த படத்தையும் ரசிக்கலாமே??

Wednesday, December 8, 2010

தீராத கோபம்..... யாருக்கு லாபம்!!!




இன்றைய சமூக நடமுறையில் அவசர வாழ்வியலை பொறுத்தவரையில் அனைவருக்கும் கட்டாயமான குணமாக மாறியுள்ளது கோபம்…..


பசி, தூக்கம், சந்தோசம் என்ற உணர்ச்சி கதம்பத்தில்அணைத்து உயிரினங்களையு ம் ஆட்டிப்படைக்கும் ஒரே ஆயு தமும் இதுவாகும்…
பலர் கூற கேள்விப்பட்டிருக்கிறேன்… கோபம் வருகிறது. ஆனால் ஏன் வருகிறது என்று புரியவில்லை….







கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மன அழுத்தம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச்  சூழலில் யார் தான் மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும்  சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

இயந்திர கதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால் மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!







நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் கடுமையாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டு இருக்காமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லாதவற்றை சாவகாசமாகவு ம் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்து விட முடியும். பிறகு ஏன் கோபம் வரப் போகிறது?

சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வு களைப் போன்று சாதாரண உணர்வு தான் என்று புரிந்து கொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்படுத்துவது புத்திசாலித்தனம். நீங்கள் எதையூம் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையூம் வெறுப்பையூம் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.







•    வேலைக்கு கிளம்பும்போது கடைசி பேரூந்தையோ, அல்லது தொடரூந்தையோ தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா?

•    அலுவலகத்தில் உயர் அதிகாரியோ,  உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா?
•    உறவினர்கள்  நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா?


 இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.







கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவு தான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.






கோபப்படும் போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும் போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது. கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.


பி கு:அதிகமா கோபபடுறவங்க நல்ல வாழ்ந்ததா சரித்திரம் கிடையாது!!! 
           இத நான் சொல்லல........

Monday, December 6, 2010

வாழ்த்துக்கள்..


நவீன உலகத்தில் மின்மவியல் ஊடகத்தின் பங்கானது அளப்பரியது.. மக்களுக்குள் ஊடுருவிக்கொண்ட ஊடகங்களின் மகத்தான பணிக்குள் மின்மவியல் ஊடகங்களின் மின்னல் வேகத்துக்கு ஒப்பாகவும் , அறிந்தவற்றை தெரிவிக்கவும், தெரியப்பட்டதை அறிந்து கொள்ளவும் என பல வித நோக்கில் மிளிர போவது என் வலைப்பூ "பிரவாஹி"!.....
 




ஊடகம் என்ற பெரும் கடலில் முழ்கி முத்துக்களாய் பெற்ற அனுபவ பகிர்வுகளையும் தகவல் களஞ்சியங்களையும், இதர பல விடயங்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அவாவில் மேற்கொண்ட சிறு
முயற்சியின் விளைவே இந்த    "பிரவாஹி" வலைப்பூ !!!








பிந்திய பதிவுகளை முந்திக்கொண்டு தரும் முயற்சி உங்கள் ஆதரவுடன் அரங்கேரட்டும்....





முக்கியம்:
பின் ஊட்டல்கள்  எதுவாய் இருப்பினும் பயம் இன்றி பகிர அழைக்கிறேன்...

தொடரும் உங்கள் அன்பான ஆதரவுக்காய்!!!

அன்புடன்,
பிரவாஹி